
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே 13 வயது சிறுமி கொலை செய்த சம்பவத்தில் சிறுமியின் தந்தை உள்ளிட்ட 2 பேர் கைது மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர், செல்வம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்ற மாந்திரீகம் செய்யும் பெண்ணின் பேச்சைக் கேட்டு பெற்ற மகளையே தந்தை பலி கொடுத்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் குமார் திடுக்கிடும் தகவல்..
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் கடந்த 18ஆம் தேதி கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடி ஊரில் 13 வயது சிறுமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்:- அப்போது அவர் பேசுகையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் கடந்த பதினெட்டாம் தேதி 13 வயது சிறுமி வித்யா கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் தந்தை பன்னீரும் அவரது உறவினரான குமாரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர், ஜோதிடம் மாந்திரீகத்தின் மீது நம்பிக்கை உடைய பன்னீர் புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த வசந்தி என்ற மாந்திரீகம் செய்யும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவர் பன்னீரின் மூன்று மகள்களில் ஒரு மகளை பலிகொடுத்தால் செல்வம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் சக்தி அதிகரிக்கும் என்று கூறியதைக் கேட்ட பன்னீர் அவரது இரண்டாவது மனைவி மூக்காயி பன்னீரின் உறவினர் குமார் மாந்திரீகம் செய்யும் பெண் வசந்தி மற்றும் இவர்களுக்கு உதவி புரிந்த மின்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகாயி உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து கடந்த 17ஆம் தேதி இரவு நொடியூர் பகுதியில் உள்ள தைல மரக் காட்டில் பூஜை செய்துள்ளன்ர, பின்னர் கடந்த 18 ஆம் தேதி தண்ணீர் எடுக்க வந்த பன்னீரின் மூன்றாவது மகள் வித்தியாவை உன்னிடம் பேச வேண்டும் என்று தோளில் கை போட்டு அழைத்துச் சென்ற பன்னீர் சிறுமி அணிந்திருந்த துண்டால் குரல்வளையை நெரித்துள்ளார், சிறுமி கத்தியதால் அருகே நின்ற குமார் மூக்காயி முருகாயி உள்ளிட்ட நால்வரும் கால் கைகளை பிடித்து கத்தவிடாமல் செய்துள்ளனர் பின்னர் சிறுமி மயக்கமுற்றதால் இறந்து விட்டதாக அங்கிருந்து சென்றுள்ளனர், பின்னர் பன்னீரும் எதுவும் நடைபெறாதது போல் வித்தியாவை தேடியுள்ளார் பின்னர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வித்யாவை அவரது உறவினர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து நிலையில் 19ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த வழக்கில் உள்ள குற்றவாளிகளை பிடிக்க 40 பேர் கொண்ட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அனைவரும் சிறப்பாக செயல்பட்டதாகவும் தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டுள்ளனர் மீதம் இந்த வழக்கில் உள்ள மாந்திரீகத்தில் ஈடுபட்ட வசந்தி மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்த முருகாயி உள்ளிட்ட பேரை தேடி வருவதாகவும் மேலும் இந்த வழக்கில் சம்பந்தமுடைய பன்னிரிர் இரண்டாவது மனைவி மூக்காயி கடந்த 30ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாகவும் அவர் இறப்பில் சந்தேகம் உள்ளதால் அதுவும் புலன் விசாரணையில் உள்ளது என்றும் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை கைது செய்தால் மேலும் இந்த வழக்கில் யார் யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர் இன்னும் இது போன்று செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது தெரியவரும் என்று தெரிவித்தார்.