டாஸ்மாக்கில் உயர்தர மதுவகைகள் திருடிய மர்ம ஆசாமிகள்.. போலிசார் வலைவீச்சு

816

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காட்டில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த மது வகைகளை மட்டும் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஆலங்காட்டில் டாஸ்மாக் கடை உள்ளது இந்நிலையில் இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற விற்பனையாளர் மற்றும் சூப்பர்வைசர் இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மதுவகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடையின் சூப்பர்வைசர் சூரியகுமார் வடகாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுக்கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் இருந்த நிலையில் 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உயர்ந்த ரக மது வகைகள் மட்டும் திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

Leave a Reply to அ.தீ.கிருஷ்ணன் Cancel reply

Please enter your comment!
Please enter your name here