சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை.. முற்றுப்புள்ளி வைத்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரா. சக்திவேல்

644
07.06.2020 திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட தனிப்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது வடமதுரை அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்த வட மதுரை பகுதியைச் சேர்ந்த அறிவு கண்ணன்(40) என்பவர் உட்பட மூன்று நபர்களை கைது செய்தனர். மேலும் TNLR Act ன் படி வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து பணம் ரூபாய் 2,870/-ம், 03 மடிக்கணினி, 02 பிரிண்டர், இருசக்கர வாகனம் ஒன்று, மற்றும் போலியான லாட்டரி டிக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த பரமசிவம்(45) மற்றும் தங்கராஜ்(57) ஆகிய இருவரையும் கைது செய்து TNLR Act ன் படி வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3491 லாட்டரி சீட்டுகளும், பணம் ரூபாய் 53,520/-ம் பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here