

வழிப்பறி செய்யப்பட்ட தங்க நகையை 3 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த தேனி மாவட்ட போலீசார்.
06.06.2020.
வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபரிடம் 3 சவரன் தங்க நகையை வழிப்பறி செய்த நபரை SIதிரு.பாலசுப்பிரமணி அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு மூன்று மணி நேரத்தில் வழிப்பறியில் ஈடுபட்டவரை பிடித்து 3 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.இந்த காவல்துறையினர் துரித நடவடிக்கை தேனி மாவட்ட பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது..