
ஆலங்குடி அருகே சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் மற்றும் டாடா ஏசி வாகனம் பறிமுதல் செய்து ஆலங்குடி போலிசார் துரித நடவடிக்கை..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சட்டவிரோதமாக டாட்டா ஏசி வாகனத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த நபரை ஆலங்குடி உதவி ஆய்வாளர் சிவக்குமார் கைது செய்ததோடு அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் சென்ற காவலர்கள் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கலிபுல்லா நகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த டாட்டா ஏசி வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வாகனம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அந்த வாகனத்தை ஓட்டி வந்த அதிரான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்ற இளைஞரை கைது செய்தனர்.
போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் புதுக்கோட்டை ஆலங்குடி அருகே வல்லத்திராகோட்டை பகுதியிலிருந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்ததாகவும் இதனை கலிபுல்லா நகரிலுள்ள ஒரு ரைஸ்மில்லிற்கு கொண்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து போலீசார் அந்த ரைஸ்மில்லிற்கு சென்று பார்வையிட்ட போது அங்கு ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து அதை குருனையாக அரைத்து கோழி தீவனங்கள் மற்றும் ரவா தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட ரைஸ்மில் உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள குற்றவாளி நாகராஜ் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஒரு பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.