ஒட்டன்சத்திரம் அருகே போக்சோ சட்டத்தில் கீழ் ஒருவர் கைது..

578

சிறுமியை காதலிப்பதாகக் கூறி 5 மாத கர்ப்பமாக்கியவன் கைது!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியை தட்டான்குழிக்காடு பகுதியைச் சேர்ந்த சரவணகுமார்(21) என்பவர் காதலிப்பதாகக் கூறி பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். தற்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார்.

இதனையறிந்த சிறுமியின் தாயார் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரினை தொடர்ந்து நிலைய ஆய்வாளர் திருமதி.லட்சுமி பிரபா அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியை ஏமாற்றி காதலித்து கர்ப்பமாக்கிய சரவணக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here