
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கரட்டுபட்டி கிராமத்தில் வசித்து வரும் 16 வயதான சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியும் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த உதயகுமார் (21) என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே அந்த சிறுமியை ஏமாற்றும் நோக்கிலேயே பழகி வந்த உதயகுமார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனால் அந்த சிறுமி கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது.
இதை வௌியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதனிடையே உதயகுமாருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடந்துள்ளது.
இதனை அறிந்த சிறுமி மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் தன்னை உதயகுமார் ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டதாகவும் வேறு பெண்ணை மணந்து கொண்டதாகவும் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் திருமணம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், உதயகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். சிறுமி கொடுத்த புகாரால் அதிர்ச்சியான உதயகுமார், தான் செய்த தவறை ஒத்துக்கொண்டார்.
இதனையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
