பழனிக்கு சென்னையிலிருந்து அனுமதியின்றி வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பழனி நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்

751

பழனிக்கு சென்னையிலிருந்து அனுமதியின்றி வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பழனி நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்

பழனிக்கு சென்னையிலிருந்து அனுமதியின்றி வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பழனி நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரானா தொற்றினை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக தமிழகம் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு
போக்குவரத்து வசதி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு
மண்டலத்திற்கு செல்ல இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பலர் மின் அனுமதிச் சீட்டு (E-Pass)இல்லாமலும், மின் அனுமதிச் சீட்டு (E-Pass) மோசடி செய்தும் மண்டலம் விட்டு மண்டலம் செல்வது தெரிய வருகிறது. அவ்வாறு
மின் அனுமதிச் சீட்டு இல்லாமலும், மின் அனுமதி சீட்டு மோசடி செய்வது தெரிய வந்தால்
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டம் – 2005 ன் கீழும், இந்திய
தண்டனைச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என
எச்சரிக்கை செய்யப்படுகிறது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அரசால்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும் போது
முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனக் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
முகக்கவசம் அணியாத நபர்களிடம் அபராதம் வசூல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை
செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here