புதுக்கோட்டை நகர் பகுதிகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட நபர்கள் கைது

774

புதுக்கோட்டையில் 7.15 லட்சம் கள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது!

புதுக்கோட்டையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற ஜெயராமன், பழனியப்பன் மற்றும் வேலு ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ள நோட்டுகளை மாற்றும் கும்பல் பிடிபட்டு வருகிறார்கள்.

கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலும் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற ஒரு நபரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை வேண்டுகோள்.

சந்தேகத்திற்குரிய நபர்கள் கள்ள நோட்டுகளை மாற்ற முற்பட்டால் உடனே புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here