மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடந்த கொலை தொடர்பாக இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்

706

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடந்த கொலை தொடர்பாக இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று முன்தினம் 8 ஆம் தேதி சிகிச்சை பெற்று வந்த கரும்பாலையை சேர்ந்த முருகன் மருத்துவ மனைக்குள்ளேயே ஐந்து நபர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அப்பொழுது அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் பணியிலிருந்த தலைமை காவலர் சுரேஷ்குமார் காவலர் லட்சுமணன் இரண்டு பேரும் , கவனக்குறைவாக செயல்பட்டது , கொலை தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்காதது உள்ளிட்ட காரணத்தினால் இருவரையும் மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் , பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here