Home இந்தியா ஆர். எஸ் பாரதி ஜாமீனை ரத்து செய்ய வேண்டி சிசிபி போலீசார் உச்சநீதிமன்றத்தில் மனு

ஆர். எஸ் பாரதி ஜாமீனை ரத்து செய்ய வேண்டி சிசிபி போலீசார் உச்சநீதிமன்றத்தில் மனு

0
ஆர். எஸ் பாரதி ஜாமீனை ரத்து செய்ய வேண்டி சிசிபி போலீசார் உச்சநீதிமன்றத்தில் மனு

பட்டியலின மக்கள் மற்றும் பட்டியலின நீதிபதிகளின் நியமனம் குறித்து திமுக அமைப்புச் செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான ஆர் எஸ் பாரதி பேசினார். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஆர்எஸ் பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  மே 23ஆம் தேதி அதிகாலை சென்னை வீட்டில் ஆர் எஸ் பாரதியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜூன் 1 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது ஜாமீனில் ஆர் எஸ் பாரதி உள்ள நிலையில் வழக்கு தொடர்பாக கைது செய்து விசாரணை செய்ய வேண்டியுள்ளதால் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிசிபி போலீசார் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த மனு மீது விரைவில் விசாரணை வரவுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here