தமிழக காவல்துறை நேர்மையான இளம் காவல்துறை அதிகாரியை இழந்து விட்டது

1701

தமிழக காவல்துறை நேர்மையான இளம் காவல்துறை அதிகாரியை இழந்து விட்டது

திருவில்லிபுத்தூர் காவல் உட்கோட்டம்,
நத்தம்பட்டி காவல் நிலைய சரகம், திருவில்லிபுத்தூர் to மதுரை மெயின்ரோடு, சொக்கம்பட்டி பேருந்து நிறுத்தும் அருகில், இன்று 11.06.20 ம் தேதி 10.30 மணியளவில், திரு.பிரதீஸ் 30/20 (சார்பு ஆய்வாளர்) த.பெ.சாலமன்வேதமணி வீரகேரளம்புத்தூர், திருநெல்வேலி. என்பவர், TN72 PA 5586 அப்பாச்சி இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு சென்று கொண்டிருந்த போது, எதிரே ஞானகுரு 32/20 த.பெ.செல்லச்சாமி TN 45 AV 5799 (பாரத் கன்ஸ்டரஷன்) டிப்பர் லாரி கிராவல் ஏற்றி திருவில்லிபுத்தூருக்கு வந்த போது நேருக்கு நேர் மோதியதில் சம்பவம் இடத்திலேயே மேற்படி பிரதீஸ் இறந்து விட்டார். இவரது பிரேதம் பிரேதப் பரிசோதனைக்காக திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர் . இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

¶ பணியில் சேர்ந்த தேதி: 01.04.2016
¶ பிறந்த தேதி: 07.02.1990
¶ தற்போது பணி செய்யும் இடம்: சென்னை தலைமைச் செயலகத்தில் Roving Unit வேலை செய்து வருகிறார். தற்போது நான்கு நாட்கள் தற்செயல் விடுப்பில் வந்துள்ளார்.
¶ இவரது தந்தை திரு. சாலமன் வேதமணி அவர்கள், தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி செய்து வருகிறார்.
என்ற விபரம் பணிந்து அறிக்கை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here