திருச்சி ஜூன் 11
திருவானைகோவிலில் கண்காணிப்பு கேமராக்களை
திருநாவுக்கரசர் எம்பி தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகர பகுதிகளில் குற்றசம்பவங்களை தடுக்கும் வகையில் திருநாவுக்கரசர் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து
ரூ20 லட்சம் மதிப்பில் திருவானைக்காவல் மற்றும் உறையூர் பகுதிகளில் அமைக்கப்பட்ட
69கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு தொடக்க விழா நேற்று திருவானை கோவிலில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். இதில் திருநாவுக்கரசர் எம்.பி கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில்:
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் கொரோனா நேரத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு
ரூ 20லட்சம் வீதம் 1கோடியே 60லட்சம் வழங்கி உள்ளேன். மாநகரில் நடைபெறும் திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றசம்பங்களில் ஈடுபடுபவர்களை காவல்துறை எளிதில் கண்டுபிடிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், குற்றங்களை தடுக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ20லட்சம் மதிப்பில் 69 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நிகழ்ச்சியில் அரசு மேலும் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து குடும்பத்தினருக்கும் மத்திய அரசு ரூ5000ம் மாநில அரசு ரூ5000ம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் அனைத்து மருத்துவ செலவுகளையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்றார். விழாவில் மாநகர போலீஸ் கமிஷ்னர் வரதராஜிலு, உதவி கமிஷ்னர் நிஷா, ஸ்ரீரங்கம் தாசில்தார் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்ட செய்தியாளர் JK


