
பொன்னேரியில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு தீவிரம்.துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் நேரில் ஆய்வு!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சிக்குட்பட்ட 9வது வார்டில் அடங்கிய முத்துமாரி அம்மன் கோவில் பின்புறமுள்ள கும்மமுனிமங்களம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து அந்த பகுதியை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பொன்னேரி போலீசார் அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்படி
24 மணி நேரமும் அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் போலீசார் சீல் வைத்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் இன்று மாலை அங்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.
போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உதவி ஆய்வாளர் மகாலிங்கத்திடம் கேட்டறிந்தார்.மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு போலீசாரை அறிவுறுத்தினார்.

