


ராமநாதபுரம் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை..
ராமநாதபுரம் , சத்திரக்குடி அருகே எட்டிவயலைச் சேர்ந்த பெண் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற பரிந்துரைத்திருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. டாக்டர்,வீ.வருண்குமார் ஐ.பி.எஸ் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே எட்டிவயல் வேலுச்சாமி மனைவி தெய்வானை(53),இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர் .
இவர்களில் ஒருவர் மாவட்ட காவல் நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் 26.11.2019 மாலை வயலுக்கு சென்ற தெய்வானை,27.11.2019 காலை கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது.
உடலில் சிறு காயங்கள் இருந்தன.அவர் அணிந்திருந்த நகைகளில் சிலவற்றை காணவில்லை எனவும் கூறப்படுகிறது . இது தொடர்பாக சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தெய்வானை கொலை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்,வீ.வருண்குமார் ஐ.பி.எஸ் தெரிவித்தார்…
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..