சசிகலா எப்போது விடுதலை? கர்நாடக சிறைத் துறை அளித்த பதில்…

918

சசிகலா எப்போது விடுதலை ஆவார்?’

பெங்களூருவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா (சிறைவாசி எண் 9234) எப்போது விடுதலை ஆவார்?’ என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தார். அவருக்குக் கர்நாடக சிறைத்துறை நேற்று அளித்த பதிலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“கொரோனா செய்தியைவிடத் தமிழகத்தில் சசிகலா எப்போது வெளியே வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, ஆளும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலரின் அடிவயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. அதனால், உறுதியாக சசிகலா எப்போது விடுதலையாவார் என்பதைத் தெரிந்துகொள்ள முயன்றேன்.

கடந்த 14.5.2020 அன்று ஆர்.டி.ஐ மூலம் சசிகலா எப்போது விடுதலை ஆவார் என்ற கேள்வி கேட்டிருந்தேன். நேற்று (11.6.2020) கர்நாடக சிறைத்துறை அளித்த பதில் கடிதம் எனக்குக் கிடைத்தது. அதில், ‘சசிகலா விடுதலை ஆவதில் பலதரப்பட்ட குழப்பங்கள் இருப்பதால் எங்களால் கணிக்க முடியாது.

உதாரணமாக, அபராதத் தொகையை சசிகலா கட்டியிருந்தால் ஓரளவுக்குத் தெரிந்திருக்கும். அபராதத் தொகை கட்டாமல் இருப்பதால் எங்களால் அவர் எப்போது விடுதலை ஆவார் என்பதைச் சொல்ல முடியாது’ என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here