தன் கணவர்
மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி காவல்துறை ஐஜியிடம் மனைவி புகார் மனு.

907

திருச்சி ஜூன் 12

தன் கணவர்
மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி காவல்துறை ஐஜியிடம் மனைவி புகார் மனு.

தனது கணவரை கொலை செய்யும் நோக்கத்துடன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டை அடுத்துள்ள வேப்பங்காடு பகுதியை சேர்ந்த அவரது மனைவி பாரதி திருச்சியில் மத்திய மண்டல காவல்துறை தலைவர்
அமல்ராஜ்விடம் புகார் மனு அளித்தார்.

அம்மனுவில்
தஞ்சாவூர் மாவட்டம், தாலுகாவிலுள்ள வேப்பங்காடு
பகுதியை சேர்ந்த எனது கணவன் பிரபாகரன் மீது கடந்த 7ஆம் தேதி பட்டுக்கோட்டை தாலுக்கா வேப்பங்காடு பகுதியிலுள்ள மதியழகன் என்பவரது மகன் சிவராஜ் மற்றும் கதிர், மணியரசன், சிவகுமார், ஜெயபிரகாஷ், பாலமுருகன், சந்தோஷ், குணசேகர் ஆகியோர்
அரிவாள், கட்டை மற்றும்
ஆயுதங்களுடன் வந்து
பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்தார். இப்போது புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து தஞ்சை மாவட்டம் திருவோணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்
மற்றும் ஒரத்தநாடு காவல்துறை கண்காணிப்பாளரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே,
எனது கணவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களது உயிருக்கும். உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் பேட்டியளித்த பாரதி
பட்டுக்கோட்டை தாலுகா வேப்பங்காடு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ராஜு என்பவர் 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்து வருவதாக எனது கணவர் பிரபாகரன் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு ஊழல் செய்வதாகவும், மேலும் பொது இடத்தை அகற்றக் கூடாது எனவும் மனு கொடுத்ததாக கூறி முன் விரோதம் காரணமாக சரமாரியாக தாக்கி உள்ளார். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளேன் என கூறினார்.

Trichy JK

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here