தேனி அருகே கஞ்சா கடத்திய கும்பல் கூண்டோடு கைது..

727

ஜூன் 12 :-தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி முல்லை பெரியாறு ஆற்றுப்பாலம் அருகே பிக்கப் வாகனத்தில் கஞ்சா கடத்திய நபர்களை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே நாராயண தேவன் பட்டி சேர்ந்த முருகன் என்பவரது மகன் முத்தையா (38)இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த முகமது அஸ்லாம், புதுப்பட்டி யைச் சேர்ந்த சுரேந்தர்,கம்பம் குரங்கு மாயன் தெருவை சேர்ந்த துரைப்பாண்டி மகன் அன்பரசன்,கேகே பட்டியைச் சேர்ந்த காசிமாயன் என்பவரது மகன் மாய சங்கிலி ஆகியோரோடு வாகனத்தில் கஞ்சா கடத்தி வருவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்து வந்த ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது பிக்கப் லோடு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 10கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்ததுமேலும் வாகனத்தில் இருந்த நான்கு பேரையும்
வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தப்பித்துச் சென்ற மாய சங்கிலியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரியகுளம் செய்திகளுக்காக எஸ்.கார்த்திகேயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here