
கலிபோர்னியா ஹெலிகாப்டர் விபத்து படங்களைப் பரப்பி வதந்தி..
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே செங்கானூர் ஊராட்சி வைந்தனூர் கண்மாயில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதாக வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் பரபரப்பான தகவல் பரவியது.
இதுகுறித்து விசாரித்தபோது ஆடியோவில் குறிப்பிட்டிருந்தபடி எந்த விபத்தும் நடைபெறவில்லை என அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மறுப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
கடந்த ஜனவரி 26ஆம் தேதி கலிபோர்னியாவில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்து ஒன்றின் படங்கள்தான் சமூக ஊடகங்களில் பரவும் படங்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து எதுவும் நடைபெறவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.
அதை போல புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண்சக்திகுமார் இந்த செய்தி வதந்தி என்று கூறியுள்ளார்கள்..
