புதுச்சேரியில் கொலை முயற்சி வழக்கில் பிடிபட்ட இளைஞருக்கு கரோனா; காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு
புதுச்சேரியில் கொலை முயற்சி வழக்கில் பிடிபட்ட 23 வயது இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தன்வந்திரி நகர் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
காவல் ஆய்வாளர் உட்பட 12 போலீசார் தனிமைப்படுத்த சுகாதாரத் துறை உத்தரவு
புதுச்சேரி கோரிமேடு தன்வந்திரி காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உட்பட காவல் நிலையத்தில் இருந்த 12 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்க சுகாதாரத் துறை உத்தரவு.
