இரவு வாகன சோதனையில் மதுபாட்டில்களுடன் சிக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன் கார்.. டிரைவர் கைது செய்து ஜாமீனில் விடுதலை

1447

வாகன சோதனையில்
பிரபல நடிகைக்கு சொந்தமான காரில் மது பாட்டில்கள் சிக்கியது

கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த வியாழக்கிழமை இரவு வாகனச் சோதனை செய்துக் கொண்டிருந்த கானத்தூர் போலீஸார், அங்கு வந்த TN 07 CQ 0099 என்ற பதிவெண் கொண்ட இன்னோவா சொகுசு காரை மறித்து, அதில் இருந்தவர்களிடம் சோதனையிட வேண்டும் என தெரிவித் தனர்.

அப்போது அந்த காரில் இருந்த வர்கள் காரை சோதனையிடுவதற்குசம்மதம் தெரிவித்துள்ளனர். காரை
சோதனை செய்ததில் அந்த காரில் 96 பீர் பாட்டில்கள், 8 மதுப்பாட்டில்கள் இருந்துள்ளது தெரியவந்தது. காரிலிருந்து மது பாட்டில்களை கைப்பற்றிய போலீஸார்,

இது தொடர்பாக அந்த காரை ஓட்டி வந்தசென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் காரின் நெம்பரை வைத்து பார்த்த போது அது பிரபல திரைப்பட நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு சொந்தமான கார் என்பது தெரியவந்தது.

பின்னர் கார் ஓட்டுநர் செல்வகுமார் தனது சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here