
கரூர் – 13.06.2020
கரூரில் பாழடைந்த மற்றும் பயன்படுத்தாத கேணியில் விழுந்த தேசிய பறவைக்கு ஆதரவுக்கரம் நீட்டி தீயணைப்புப் படையினர் உயிருடன் மீட்டனர்
கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை பகுதியை அடுத்த நத்தமேடு பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தாத கேணியில் தண்ணீர் இல்லாத நிலையில் ஆண் மயில் ஒன்று கிணற்றில் தவறி விழுந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் தேசியப் பறவையான மயிலை காக்கும் பொருட்டு கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து வந்து உயிருடன் மயிலை மீட்டனர். கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு சர்புதீன் தலைமையில் வந்த தீயணைப்புத் துறையினர் தங்களுடைய உயிரையும் துட்சமென நினைத்து நமது தேசியப் பறவையான மயிலை பத்திரமாக மீட்டு காட்டிற்குள் விட்டனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சுவாரஸ்யத்தினையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
கரூர் செய்தியாளர் பிரபாகரன்