
சென்னை காவல்துறை ஆணையாளர் மனிதாபிமானம்
சென்னை மேற்கு மாம்பலம் காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்து பாலமுருகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவரது உடல் நிலை ஆபத்தான கட்டத்திற்கு சென்று விட்டதால், சிகிச்சை பலனளிக்கவில்லை. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி சேதனையில் உள்ள ACTEMRA tocilizumab எனும் மருந்தை மருத்துவர்கள் கடைசி கட்ட முயற்சியாக பரிந்துரை செய்தனர். ஒரு தடுப்பூசியின் விலை ரூ.75 ஆயிரமாகும், 3 நாட்கள் இந்த தடுப்பூசியை போட வேண்டும். இந்த தடுப்பூசியை தான் தெலுங்கானா கவர்னர் தமிழிசை, MLA ஜெ.அன்பழகன் சிகிச்சை போது அனுப்பி வைத்திருந்தார். சென்னை மாநகர காவல் ஆணையர் A. K. விஸ்வநாதன் அவர்கள் தனது சொந்த செலவில் இந்த மருந்தை காவல் ஆய்வாளர் பாலமுருகனுக்கு வாங்கி கொடுத்து உதவியிருக்கிறார். பாலமுருகனுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு உடல் நிலை தேறி வருகிறார். காவல் துறையில் தன் கீழ் பணிபுரியும் ஒரு ஆய்வாளருக்கு காவல் ஆணையர் இவ்வளவு முயற்சி செய்து உயிரை காப்பாற்றியது செய்தி அனைவரிடமும் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்று உள்ளது