

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி மாவட்டம் (13.06.2020) தாழையூத்து காவல் நிலையம் இ.த.ச.பிரிவு 147,148,294(b),427,506(ii)IPC, மற்றும் 294(b),307,506(ii)IPC வழக்குகளில் எதிரியான ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்த அஜித் குமார் 26 (த/பெ கணேசன்) என்பவர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்து, பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க
தாழையூத்து காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஜெயந்தி அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரி அஜித் குமார் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் 13.06.2020 தேதி அடைக்கப்பட்டனர்.