



போலி இ-பாஸ் தயாரித்து சென்னையிலிருந்து பயணிகளை ஏற்றிசென்ற சொகுசு கார் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்கள் சென்னையில் இருந்து வருவது தெரியவந்தது.
பின்னர் அவர்கள் வைத்திருந்த இ-பாஸை சேதனை செய்தபோது அது போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காரை ஓட்டிவந்த சென்னையை சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கன்னியாகுமரியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக 3 பேர் பிரகாஷை அனுகியுள்ளார்.
அப்போது 2 மணி நேரத்திற்குள் இ பாஸ் எடுத்து தருவதாக கூறி அவர்களிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பிரகாஷ் பெற்றுள்ளார்.
பின்னர் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று போலி இ பாஸ் தயார் செய்து 3 பேரையும் தனது காரில் அழைத்துக்கொண்டு கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார்.
அனைத்து சோதனை சாவடிகளையும் கடந்த அவர்கள் இறுதியாக ஆரல்வாய்மொழி சோதனைசாவடியில் சிக்கியுள்ளனர். இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார், பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.