
அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி பறிமுதல். அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுனரை கைது செய்தனர் உரிமையாளரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாகமலை புதுக்கோட்டை காவல் எல்லைக்குட்பட்ட துவரிமான் பகுதியில் புவியியல் மற்றும் சுரங்க அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர் அப்பொழுது மேல காலை நோக்கி டிப்பர் லாரி அனுமதி இல்லாமலும் உரிமம் இல்லாமலும் 3 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது இதை அடுத்து புவியியல் மற்றும் சுரங்க அதிகாரி பாண்டியராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கரடிப்பட்டி யை சேர்ந்த முருகேசன் வயது 32 கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர் தப்பி ஓடியவர்களை சேர்ந்த லாரி உரிமையாளர் முருகனை வலைவீசி தேடி வருகிறார்கள்..
செய்தியாளர் காளமேகம் மதுரை
