
ஐந்து காவலர்களுக்கு கொரோனா எதிரொலி
சங்கர் நகர் காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு..
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்த ஐந்து காவலர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் வேளையில், மேலும் இந்த நோய் தொற்று மற்ற காவலர்களுக்கும் பரவாமல் தடுக்கும் வகையில், பம்மல் நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி தலைமையில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு கட்டமாக, காவல் நிலையத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து,கிரிமி நாசினி தெளிக்கப்பட்டது. முக்கியமான வழக்குகள் சம்மந்தமாக வரும் பொதுமக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு நலன் கருதி மற்றவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.