

மதுரையில் இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் சென்ற போக்குவரத்து தலைமை காவலர் மின்கம்பத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை பனங்காடியை சேர்ந்தவர் ஜோதிராம்(40). இவர் மதுரை தல்லாகுளம் போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் .
இவர் இன்று மாலை பணிக்கு செல்வதற்காக தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பினார். கூடல் நகர் அருகே வந்தபோது முன்னால் செனற ஒரு தண்ணீர் லாரியை முந்த முயன்று உள்ளார் .
அப்போது இவர் சென்ற வண்டி தடுமாறி அதில் அருகே இருந்த ரோட்டின் அருகே இருந்த ஒரு மின்கம்பத்தில் மோதியது. இதில் போக்குவரத்து தலைமை காவலர் ஜோதிராமிற்கு தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அதிகமான அளவு ரத்தம் வெளியேறியது. இதனையடுத்து அருகே இருந்தவர்கள் இவரை மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர் . ஆனால் இவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் செய்தியாளர் கா. நாகலட்சுமி மதுரை மாவட்டம்