
உளுந்தூர்பேட்டையில் பேருந்துநிலையம் கடைவீதி பேருந்துகள் மற்றும் உணவகங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிதா? கவசம் அணிவிக்கப்படுகிறதா? என அதிரடி ஆய்வு நடத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் 500க்கும் மேற்பட்டோருக்கு முகக் கவசங்கள் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் அவர்களுக்கு குரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார் இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் கடை வீதிகளில் உலா வரும்போது வாகன ஓட்டிகள் முகக் கவசம் அணியாமல் செல்வதாகவும் பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளிலும் உணவகங்களிலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் பொது மக்கள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கப்படும் இருந்து வருவதாக புகார் எழுந்து வந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொறுப்பு ஜெயக்குமார் இன்று மாலை உளுந்தூர்பேட்டை பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது அரசுப் பேருந்துகளில் முக கவசம் அணியாமல் அமர்ந்திருந்த பயணிகள் மற்றும் சாலையோர உணவகங்களில் முக கவசம் அணியாமல் இருந்த சமையலர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் என 500-க்கும் மேற்பட்டோரை கண்டறிந்து அவர்களுக்கு கவசங்களை இலவசமாக வழங்கினார். இந்த ஆய்வின் போது உளுந்தூர்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் எழிலரசி மற்றும் ஏராளமான போலீசார் இருந்தனர்