

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்துள்ள மருதூர் சோதனை சாவடியில் தீவிர வாகன பரிசோதனை
தமிழகத்தில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வாகனங்களில் வரும் நபர்களாலேயே அதிகமான நோய் தொற்று பரவுவதால் கரூர் மாவட்ட எல்லைகளில் 09 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மாவட்ட எல்லைக்குள் முறையான இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எஸ்.பி பாண்டியராஜன் அறிவித்திருந்தார். அதன்படி கரூர் மாவட்டம் மருதூர் சோதனை சாவடியில் மாவட்ட எல்லையை கடக்கும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களை தவிர அனைத்து வாகனங்களுக்கும் முறையான இ-பாஸ் உள்ளதா என சோதனையிட்டு, வட்டார மருத்துவர் லோகாம்பாள் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா, அவர்களின் பெயர் மற்றும் பயண விபரங்களை குறித்து கொண்ட பிறகே செல்ல அனுமதிக்கின்றனர். காவலர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தொடர்ந்து மாவட்ட எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.