தாராபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்தார்

654

தாராபுரம் ஜூன்:-17
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலையம் கடந்த 1906ம் ஆண்டு கட்டப்பட்டு 112 ஆண்டுகளாக பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மிகவும் சிரமமாக இருந்தது எனவே இதனை கருத்தில் கொண்டு மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சீரிய நடவடிக்கையால் ரூபாய் 1,43 ,58000/.(ஒரு கோடியே நாற்பத்து மூன்று லட்சத்து ஐம்பத்து எட்டாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தாராபுரத்தில் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு போக்குவரத்து காவல்துறை ஆகியவற்றை ஒரே கட்டிடத்தில் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு கடந்த 25/6/2018 ஆண்டு கட்டிடம் கட்ட ஆரம்பித்து 13.2.2020.ந் தேதி செவ்வனே கட்டிமுடிக்கப்பட்டது மேற்படி காவல் நிலையமானது இன்று தமிழக முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மேற்கு மண்டல காவல்துறை ஐஜி பெரியய்யா, டிஐஜி கார்த்திகேயன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,திஷாமிட்டல், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார்,தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராமன்,காவல் ஆய்வாளர் கோபிநாத், தாராபுரம் நகர அதிமுக செயலாளர் காமராஜ்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here