திருச்சி ஜீயபுரம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்.. இருவர் கைது..

725

ஜீயபுரம் அடுத்த நச்சலூர் அருகே உள்ள நங்கவரம் கிராம பகுதியில் குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நங்கவரம்-நெய்தலூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சிலர் டிராக்டரில் மணல் கடத்தி கொண்டிருந்தனர்.
இதையடுத்து மணல் கடத்தியதாக டிராக்டர் உரிமையாளர் நங்கவரத்தை சேர்ந்த பரமசிவம் (வயது 45). டிரைவர் ஹரிகிருஷ்ணன் (21) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த டிராக்டரும் மணலுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here