
திருப்பரங்குன்றத்தை சேர்ந்தம் கௌதம் என்பவர் நேற்று திருநகர் கனரா வங்கி முன்பு தவறவிட்ட ஒரு பவுன் தங்க நகையை திருநகர் காவல்நிலையத்தில் பணிபுரிந்துவரும் FOP (FRIENDS OF POLICE) சந்திரசேகர் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது நகையை கண்டெடுத்து திருநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இன்று 15.06.2020-ம் தேதி திருநகர் காவல் ஆய்வாளர் கணேசன் நகையின் உரிமையாளரை கண்டு பிடித்து காவல் நிலையத்திற்கு வரவழைத்து நகையை ஒப்படைத்தார். மேலும் நேர்மையாக செயல்பட்ட FOP சந்திரசேகர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.. செய்தியாளர் கா. நாகலட்சுமி மதுரை மாவட்டம்