திருவள்ளூர் அருகே போலிசாரிடம் கைவரிசை காட்டிய ஊராட்சி மன்ற தலைவர் கைது

339

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் போலீஸ் எஸ்ஐ ராஜூ, காவலர் நீலமேகம் ஆகியோர் நேற்று முன்தினம் அருமந்தை என்கிற பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மந்தையில் ஒரு கும்பல் சரக்கு அடித்துக்கொண்டு சீட்டு விளையாடிக்கொண்டு இருந்தது. கூச்சல் குழப்பம் இருந்த இடத்திற்கு எஸ்ஐ உள்ளிட்ட 2 பேரும் சென்றனர். உடனே காவலர் நீலமேகம் வேகமாக டூவீலரில் இருந்து இறங்கி சீட்டு விளையாடிக்கொண்டிருந்தவர்களை பிடிக்க முயற்சி செய்தார். அப்போது ஒருவர் நீலமேகத்தை தள்ளி விட அவர் கீழே விழுந்து விட்டார். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகவல் தெரிந்து அருமந்தை ஊராட்சி தலைவரான அதிமுகவைச் சேர்ந்த விக்ரமன்(28) அங்கு வந்தார். மீண்டும் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் விக்ரமன் உள்ளிட்டோர் இரும்பு ராடு மற்றும் உருட்டுக்கட்டையால் எஸ்ஐ ராஜீ முன்னிலையில் காவலர் நீலமேகத்தை தாக்கினர். இதில் அவரது கை உடைந்தது. இந்த சம்பவம தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஊராட்சி மன்றத்தலைவர் விக்ரமன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here