திருவள்ளூர் திருமழிசை காய்கறி சந்தையில் மாமூல் கேட்ட போலி போலிஸ் ஆய்வாளர் கைது..

470

திருவள்ளூர் அருகே போலி ஆய்வாளர் கைது திருமழிசை மொத்த காய்கறி அங்காடியில் மாமுல் கேட்டபோது ரோந்து பணியில் இருந்த போலீசார் பிடித்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்..

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் உள்ள துணைக்கோள் நகர வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மொத்த கொள்முதல் காய்கறி அங்காடியில் வெள்ளவேடு காவல் ஆய்வாளர் எனக் கூறி காய்கறி கடைகளில் மாமூல் தர வேண்டும் என்று கேட்ட சென்னை மகாகவி பாரதியார் நகரைச் சேர்ந்த ஆம்ரோஸ் 60 போலி ஆய்வாளராக நடித்து காய்கறிகளை நூதன முறையில் மிரட்டி வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார். அவரை அங்குள்ள காவல் உதவி மையத்தில் ஒப்படைத்த இருந்த காவல்துறையினரிடம் வியாபாரிகள் ஒப்படைத்தனர் பின்னர் பின்னர் வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் விசாரணையில் சென்னை மகாகவி பாரதியார் நகர் சேர்ந்தவர் என்றும் வியாபாரிகளிடம் தன்னை லோக்கல் காவல் ஆய்வாளர் என்று கூறி காகிரி பணம் கேட்டது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here