Home தமிழ்நாடு மதுரையில் கடப்பாரை கம்பிகளுடன் வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் மர்ம நபர்களின் அதிர்ச்சி வீடியோ..

மதுரையில் கடப்பாரை கம்பிகளுடன் வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் மர்ம நபர்களின் அதிர்ச்சி வீடியோ..

0
மதுரையில் கடப்பாரை கம்பிகளுடன் வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் மர்ம நபர்களின் அதிர்ச்சி வீடியோ..

மதுரையில் கடப்பாரை கம்பிகளுடன் வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் மர்ம நபர்களின் அதிர்ச்சி வீடியோ… தனிப்படை அமைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்…

மதுரை பணங்காடி பகுதியில் நேற்று நள்ளிரவு இரண்டு மர்ம நபர்கள் கடப்பாரை கம்பியுடன் வீட்டின் கதவுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடும் சம்பவம் குறித்த CCTV கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரங்களில் உலா வரும் இருவர் கையில் கடப்பாரை கம்பியுடன் பூட்டியுள்ள வீடுகளின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு வீட்டின் கதவை உடைக்கும் போது சப்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் தங்களது இல்லத்தில் உள்ள மின் விளக்கை எரியச் செய்தவுடன் சுதாரித்துக் கொண்ட மர்ம நபர்கள் அவர்கள் வெளியே வரும் முன்னர் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு அளித்த புகாரினை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில்
நேற்று ஒரே நாளில் மட்டும் அடுத்தடுத்த 3 வீடுகளின் கதவை உடைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதனிடையே ஒரு வீட்டின் கதவை உடைத்த சம்பவம் குறித்த CCTV கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கூடல் புதூர் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நள்ளிரவு நேரங்களில் கடப்பாரையுடன் கதவுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்த சம்பவம் மதுரை மாநகர் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here