Home அரசியல் மதுரையில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தியதாக 5 பேர் கைது 24 கிலோ கஞ்சா , 2.5 லட்சம் ரொக்கம் மற்றும் கார் , இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.. வீடியோ உள்ளே

மதுரையில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தியதாக 5 பேர் கைது 24 கிலோ கஞ்சா , 2.5 லட்சம் ரொக்கம் மற்றும் கார் , இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.. வீடியோ உள்ளே

0
மதுரையில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தியதாக 5 பேர் கைது 24 கிலோ கஞ்சா , 2.5 லட்சம் ரொக்கம் மற்றும் கார் , இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.. வீடியோ உள்ளே

மதுரையில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தியதாக 5 பேர் கைது 24 கிலோ கஞ்சா , 2.5 லட்சம் ரொக்கம் மற்றும் கார் , இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே வெள்ளக்கல் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தியதாக அவனியாபுரம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் , காவல்துறையினர் சார்பு ஆய்வாளர் காசி தலைமையில் வாகனத் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் வந்தவர்களை சோதனை செய்ததில் , அவர்கள் கஞ்சா கடத்தியது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து 24 கிலோ கஞ்சா , 2.5 லட்சம் ரொக்கம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் , 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடத்தலில் ஈடுபட்ட
திருப்பூர் மாவட்டம் செங்கம்பள்ளியை சேர்ந்த மொக்கராஜ் (எ) மொக்கையன் (வயது 51).
மதுரை அவனியாபுரம் மாநகராட்சி காலனியை சேர்ந்த வீரமணி (வயது 26) , மதுரை ஆனையூரை சேர்ந்த பிரகாஷ் (வயது 27), தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த அஜீத் குமார் (வயது 21), திருப்பூர் பெத்த நாயகன் பாளையத்தை சேர்ந்த நாகராஜன் (வயது 31) ஆகிய 5 பேரை கைது செய்து அவனியாபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் , மேலும் தலைமறைவான 7 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

குற்றவாளிகளிடமிருந்து இரண்டு பைக்குகள் ஒரு கார் உள்பட பணம் ரூபாய் 2.5 லட்சம் . மற்றும் 24 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here