
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5 காவல் ஆளிநர்கள் முறையே பெரியபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர்கள் திரு. வெங்கடேசன் அவர்கள், திரு. ராஜி அவர்கள், பெண் தலைமைப் காவலர் திருமதி. சரஸ்வதி அவர்கள், ஆயுதப்படை தலைமை காவலர் திரு. தயாநிதி அவர்கள், சிப்காட் காவல் நிலைய காவலர் திரு. அருணாச்சலம் ஆகியோர்கள் இன்று 17.06.2020 ஆம் தேதி மீண்டும் பணியில் சேர்ந்தனர். அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் மலர் கொத்து கொடுத்து, காவல்துறையினருடன் வரவேற்றார்.