கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காப்பதற்காகவும், மருத்துவர்களோடு முன்களப் பணியாளராக பணியாற்றும் காவல்துறையினர் எந்த அளவு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதையும், எப்படி ஒரு பாதுகாப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என்பது பற்றியும், அரசின் வழிகாட்டுதலாக கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவகத்திலிருந்து வரும் தகவல்களையும், ஒன்று திரட்டி “காவலர் வழிகாட்டுதல் கையேடு – COVID 19”, தஞ்சாவூர் சரக ஐ.ஜி டாக்டர் ஜெ.லோகநாதன் அவர்கள் காவலர்களுக்கு வழங்கினார்.
இது அனைத்து காவலர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.