
தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா கடத்திய பெண் உட்பட 5 பேரை கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் சிலை மணி தலைமையில் காட்டுப்பள்ளி வாசல் ரோடு புதிதாக போடப்பட்டு வரும் பைபாஸ் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.பொழுது சந்தேகப்படும்படி வந்த காரை வழிமறித்து சோதனை செய்ததில் 23 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளிகள் மீது சார்பு ஆய்வாளர் ரோமியோ தாமஸ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார்.
பெரியகுளம் செய்திகளுக்காக எஸ்.கார்த்திகேயன்