வாகனத்தின் ஆர்சி புத்தகத்தை திருடி பைனான்ஸியர்‌ உதவியுடன் மோசடி செய்த ஒருவர் கைது.
வாகன உரிமையாளருக்கு தெரியாமல் மோசடிக்கு உடந்தையாக பைனான்ஸ் பெற்று கொடுத்தவருக்கு போலீஸ் வலைவீச்சு.

495

கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிரகோடு அஞ்சல் சிராயன்குழி பகுதியில் வசிப்பவர் இம்மானுவேல் மகன் மேக்ளின் ஜவகர். இவர் சுற்றுலா சீருந்து சொகுசு கார் வைத்துள்ளார் இந்த காரில் திருவரம்பு பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் கேரளா மாநிலம் செல்வதற்காக அடிக்கடி அந்த வாகனத்தை எடுத்துச் செல்வது உண்டு என்பதும் அவ்வாறு வேறு மாநிலத்திற்கு செல்லும்போது வாகனத்தில் வாகனத்தின் அசல் பதிவு புத்தகத்தை கொடுத்து அனுப்பி வைப்பது உண்டு அவ்வாறு வாகனத்தில் இருந்த பதிவு புத்தகத்தை மேற்படி புஷ்பராஜ் லாவகமாக உரிமையாளருக்கு தெரியாமல் திருடி தக்கலை அருகே எஸ்ஆர்எம் பைனான்ஸ் என்ற பெயரில் பைனான்ஸ் வைத்துள்ள முருகன் என்பவரை அணுகி அந்த பதிவு புத்தகத்தை அடமானம் வைத்து பைனான்ஸ் பெற்றுள்ளார். பொதுவாக ஆசிப் புத்தகத்தை பெற்று பைனான்ஸ் வழங்கும்போது அதன் உரிமையாளரின் கையொப்பம் பெறுவது வாடிக்கை ஆனால் மேற்படி புஷ்பராஜ் திருடிக்கொண்டு வந்த ஆர்சி புத்தகத்தை பைனான்ஸ் வைத்திருக்கும் மணி என்பவர் புஷ்பராஜ் க்கு உடந்தையாக வாகன உரிமையாளரை அழைக்காமல் வாகன உரிமையாளருக்கு தெரியாமல் பைனான்ஸ் கொடுத்து மோசடிக்கு உடந்தையாக இருந்து வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்திலும் உள்துறைச் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய புகாரின் அடிப்படையில் இன்று திருவட்டார் போலீசாரால் ஆர்சி புத்தகத்தை திருடிய புஷ்பராஜ் கைது செய்யப்பட்டுள்ளார் இதில் தொடர்புடைய எஸ்ஆர்எம் பைனான்ஸ் என்ற பெயரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவரும் மணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர் மேலும் இவர்கள் இதேபோன்று திருட்டு ஆர்சி புத்தகங்களுக்கு பைனான்ஸ் என்ற பெயரில் பைனான்ஸ் கொடுத்து மோசடி செய்து ஏமாற்றி உள்ளவர்கள் குறித்த விவரங்கள் போலீசாரின் முழுமையான விசாரணை முடிந்தால் மட்டுமே தெரிய வரும் என்று கூறப்படுகிறது குறிப்பாக இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் எஸ்ஆர்எம் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவரும் மணி கைதானால் மட்டுமே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here