வேலூர் அருகே ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதால் தீக்குளித்த சிறுமி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். போக்சோ சட்டத்தில் கீழ் மூவர் கைது

534

வேலூர் அருகே ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதால் தீக்குளித்த சிறுமி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த தச்சு வேலை செய்பவரின் மகள் (15) 10-ம் வகுப்பு முடித்திருந்தார். இந்நிலையில் அதே பகுதையை சேர்ந்த 3 இளைஞர்கள் சிறுமி குளிக்கும் போது ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனால் சிறுமி கடந்த 13-ம் தேதி மண்ணெண்ணையை ஊற்றி தீ குளித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தின மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

90% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது தொடர்பாக சிறுமி அளித்த வாக்குமூலம் மற்றும் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த பாகாயம் காவல் துறையினர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கணபதி(19) ஆகாஷ்(22) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்தனர். அதில் கணபதி, ஆகாஷை குடியாத்தம் கிளைச்சிறையில் அடைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here