
இ-பாஸ் பெறாமல் நாகை மாவட்ட எல்லைக்குள் நுழைந்த 12 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு: மாவட்ட எல்லைக்குள் நுழைந்த 8 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் தகவ
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்குள்ள மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் இ பாஸ் இல்லாமல் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வரும் நபர்களை கண்காணிக்க எல்லை சோதனை சாவடிகளான வாஞ்சூர் மற்றும் நண்டலாறு பகுதிகளில் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இ-பாஸ் இல்லாமல், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து நாகை மாவட்ட எல்லைக்குள் நுழைந்த 12 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்..