குற்ற தடுப்பு நடவடிக்கைகள் சிறப்புடன் செயல்படும் நாங்குநேரி காவல் ஆய்வாளர் சபாபதி..

575

குற்றத்தை ஒழித்த ஆய்வாளர்
…………….
நெல்லை மாவட்டத்தில் நான்குநேரி போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரையிலும் 12 பேர் மீது குண்டாஸ் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் நான்குநேரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்கள் ஈடேறி வந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து வந்தனர் இதன் தொடர்பாக பொதுமக்கள் வியாபாரிகள் மத்தியில் மிகுந்த அச்சமும் கலக்கமும் ஏற்பட்டதை மறுக்க இயலாது இதனிடையே நான்குநேரிகாவல் ஆய்வாளராக சபாபதி பொறுப்பேற்ற நிலையில் கடந்தகால குற்ற ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்தார் அதன்பேரில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனையில் இருந்து தப்பியவர்களின் பெயர்களை பட்டியலிட்டார் இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் முதல் நடப்பு ஜூன் மாதம் வரையில் நான்குநேரி மறுகால் குறிச்சி மஞ்சங்குளம் பகுதிகளை சேர்ந்த 12 பேர் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது காவல் ஆய்வாளர் சபாபதியின் பார்வைக்கு தெரியவந்தது இதைத்தொடர்ந்து அப்பகுதிகளை சேர்ந்த 12 பேரை அடையாளம் கண்டு அவர்களை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார் இச்சம்பவத்தை தொடர்ந்து நான்குநேரி போலீஸ் சரகத்தில் குற்ற சம்பவங்கள் பெரிதும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் காவல் ஆய்வாளர் சபாபதியின் நடவடிக்கை பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரிதும் நிம்மதியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here