மறைந்த காவலருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்னை மாநகரம், மாம்பலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியில் இருந்த திரு.பால முரளி அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொரோனா நோய் தொற்றினால் 17.06.2020 அன்று உயிர் நீத்தார். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் முன்னிலையில் 18.06.2020 இன்று மாலை 5 மணிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
