
சங்கரன்கோவில் கிளை சிறை உதவி ஜெயிலர் பணியிடை நீக்கம்:ஜூன் 18
தென்காசி மாவட்டம்,திருவேங்கடம் தாலுகா , குளக்கட்டா குறிச்சி அருகில் ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியானார்கள். இது குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு ஆலை மேலாளரை கைது செய்து சங்கரன்கோவில் கிளை சிறையில் அவரை சிறப்பாக கவனித்துக்கொள்வது தொடர்பாக சிறை வார்டன் வைரமணி,பட்டாசு ஆலை நிர்வாகத்திடம் பேசிய ஆடியோ சமுகவலைத்தளத்தில் வைரலாக பரவியுள்ளது. இதையடுத்து வைரமணி கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்ப்பட்டார்.இதுகுறித்து பாளையங்கோட்டை மத்திய சிறை உயர் அதிகாரிகள், சங்கரன்கோவில் கிளை சிறையில் விசாரனை நடத்தினர். அதன் அறிக்கையை ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமாரிடம் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சங்கரன்கோவில் கிளை சிறை உதவி ஜெயிலர் ஆறுமுகம் பணியிடை நிக்கம்செய்ப்பட்டார்.
சங்கரன்கோவில் செய்தியாளர் மாரியப்பன்..