Home தமிழ்நாடு மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி அவர்களுக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமையில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி அவர்களுக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமையில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

0
மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி அவர்களுக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமையில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழக காவல்துறையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு அயராது உழைத்து கொரோனா நோய்த் தொற்றினால் உயிர் தியாகம் செய்த சென்னை பெருநகர மாம்பலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தெய்வத்திரு. பாலமுரளி அவர்களுக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமையில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை பெருநகர மாம்பலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தமிழக காவல்துறை காவல் ஆய்வாளர் தெய்வத்திரு. பாலமுரளி அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அயராது ஈடுபட்டு வந்தார். அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர். நேற்று (17.06.2020) அன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு தமிழக காவல்துறை இயக்குனர் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்கள், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மற்றும் காவல்துறையினர் அவரவர்கள் பணிபுரியும் இடங்களில் இன்று (18.06.2020) மாலை 5 மணிக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.

மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here