
திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஏழூர்பட்டி சமத்துவபுரத்தில் உள்ள பொதுமக்களுக்கு மதிய உணவினை தொட்டியம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ,மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜீம், IDFC பஸ்ட் பாரத் முதுநிலை மேலாளர்கள் மேரிஅன்பரசி, சிவா மேலாளர்கள் ஜான்பால்அசோக், சந்திரசேகர்,சந்துரு மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு ஆகியோர் கொரோனா தொற்று பரவால் 144 தடை உத்தரவு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு மதிய உணவினை வழங்கினார்கள். மேலும் வெளியில் செல்லும்பொழுது முகக்கவசம் அணிய வேண்டும் ,கைகளை சோப்புப் போட்டு சுத்தமாக கழுவ வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.