குடும்ப சூழ்நிலைக்காக வேற பாதையை தேர்ந்து எடுத்தேன் என்று சொல்லும் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சென்று இருந்த சூர்யா, கடந்த 16ம் தேதி திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த அதிகாரிகள், தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீசும் வீட்டில் ஒட்டினர். அப்போது அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் குறித்து அவதூறு பரப்பும் விதமாகவும், கொலை மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் சூர்யா மீது வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் டிக்டாக்கில் இவரின் கவர்ச்சி நடனத்திற்கு பல ரசிகர்கள் இருந்தாலும் பலர் பாடுவதை வேலையாக உள்ளனர்.
இவரை சில பள்ளிகள் கூட மாணவர்களுக்கு பரிசுகளை வழங்க சிறப்பு விருந்தினராக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.