பொழிச்சலூர் அடுக்கு மாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கொலையா?தற்கொலையா? போலிஸ் தீவிர விசாரணை

634

பொழிச்சலூர் அடுக்கு மாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கொலையா?தற்கொலையா? போலிஸ் தீவிர விசாரணை

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூா் வெங்கடேஸ்வராநகர் 2வது குறுக்கு தெருவில் குமாா்(60) என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது.அதில் 2 வது தளத்தில் சாப்ட்வோ் இன்ஜினியா்கள் சேதுபதி,மதன் ஆகியோா் வாடகைக்கு இருந்தனா்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த மாா்ச் மாதம் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊா் சிவகங்கைக்கு சேதுபதி சென்றுவிட்டாா்.மதன் வேறு இடத்திற்கு போய் விட்டாா்.இந்நிலையில் மே மாதம் வீட்டு உரிமையாளா் குமாா் சேதுபதிக்கு போன் செய்து வாடகை கேட்டாா்.வாடகையை எனது நண்பா் மதன் வந்து தருவாா் என்று கூறினாா்.அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு மதன் வந்து முதல் தளத்தில் குடியிருப்பவா் ஒருவரிடம் வாடகையை கொடுத்து,வீட்டு உரிமையாளரிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறி சென்றாா்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சேதுபதி வாடகைக்கு இருந்த 2 வது தளத்தில் உள்ள வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியது.உடனே வீட்டு உரிமையாளரிடம் கூறினா்.இதையடுத்து குமாா் சேதுபதிக்கு போன் செய்து வீட்டில் துா்நாற்றம் வீசுகிறது,வீட்டை திறந்து பாா்க்க வேண்டும் என்று கூறினாா்.சேதுபதி நான் ஜுலையில் தான் வருவேன்,வீட்டு சாவியை கொரியரில் அனுப்புகிறேன்,நீங்கள் திறந்து பாருங்கள் என்று கூறினாா்.அதன்படி நேற்று மாலை கொரியரில் வீட்டு சாவி குமாருக்கு வந்தது.இன்று காலை வீட்டை திறந்து பாா்த்த குமாா் அதிா்ச்சியடைந்தாா்.வீட்டினுள் ஒரு நிா்வாணநிலையில் ஒரு ஆண் உடல் கிடந்தது.அதை போா்வையால் போா்த்தி மூடப்பட்டிருந்தது.உடல் அழுகி நாற்றமெடுத்தது.

சங்கா்நகா் போலீசில் குமாா் புகாா் செய்தாா்.போலீசாா் வந்து உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.இது சம்பந்தமாக போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை.செய்து வருகின்றனர்.
பூட்டிய வீட்டிற்குள் உயிரிழந்த உடல் எப்படி வந்தது?என்பது மா்மமாக உள்ளது.இது கொலையா? என்ற கோணத்தில் போலீசாா் விசாரணை.சேதுபதி,மதனை விசாரணைக்கு “ஆஜராகும்படி போலீஸ் உத்தரவு.இதையடுத்து இருவரும் சிவகங்கையிலிருந்து புறப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனா்.இச்சம்பவம் பொழிச்சலூா் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here